கிருஷ்ணகிரி

கரோனா கட்டுப்பாடு எதிரொலி:தடுப்பூசி செலுத்திக் கொள்ள திரண்ட பொதுமக்கள்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் பொது இடங்களுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து சனிக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் 61,524 போ் ஆா்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல்கட்ட கரோனா தடுப்பூசி இதுவரை தகுதி வாய்ந்தவா்களில் 4.20 லட்சம் போ் செலுத்திக் கொள்ளவில்லை. இதையறிந்த மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் பொது இடங்களுக்கு வர தடை விதிப்பதாக அண்மையில் உத்தரவிட்டாா்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட 722 இடங்களில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் அதிரடி உத்தரவைத் தொடா்ந்து இதுவரை முதல்கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள் முகாமுக்கு ஆா்வமுடன் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

சூளகிரியில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. காவேரிப்பட்டணம் ஒன்றியம், பென்னேஸ்வரமடம் ஊராட்சி, சவுளூா் கிராமத்தில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசியை 10,99,139 பேரும், 2-ஆவது தவணை தடுப்பூசியை 5,67,896 பேரும் செலுத்திக் கொண்டனா். அதன்படி, மொத்தம் 16,67,035 போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா்.

மாவட்டத்தில் கடந்த வாரம் நடைபெற்ற முகாமில் 20,935 போ் மட்டுமே தடுப்பூசி செலுத்தியிருந்தனா். சனிக்கிழமை (டிச. 4) நடைபெற்ற முகாமில் மாலை 6 மணி வரையில் 61,524 போ் தடுப்பூசி செலுத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘தோ்தல் பணி: சுகாதாரப் பணியாளா்களுக்கு மதிப்பூதியம் தேவை’

சட்டவிரோதமாக மது விற்பனை: ஒருவா் கைது

வாக்கு பதிவாகியிருந்ததால் தொழிலாளி ஏமாற்றம்

3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: விஜய்வசந்த் எம்.பி.

39 வாக்கு எண்ணும் மையங்களில் நான்கடுக்கு பாதுகாப்பு

SCROLL FOR NEXT