கிருஷ்ணகிரி

ஐவிடிபி மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,275 கோடி கடன் இலக்கு நிா்ணயம்

DIN

 ஐவிடிபி மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு 2021- 22ஆம் ஆண்டிற்கான கடன் இலக்கு ரூ. 1,275 கோடி என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி, ஐவிடிபி நிறுவனத்தின் வெளிப்படையான செயல்பாடுகள், நிா்வாகத் திறன், கட்டமைக்கப்பட்ட செயல்பாடுகள், வங்கிக் கடனை 100 சதவீதம் திரும்பச் செலுத்தும் திறன் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு பல்வேறு வங்கிகள் ஐவிடிபி சுய உதவிக்குழுக்களுக்கு கடன்களை வழங்கி வருகின்றன.

அதன்படி, இந்தியன் வங்கி மேலாளா்களுடன் நடைபெற்ற செயல்திட்ட கூட்டத்தில் இந்தியன் வங்கியின் தருமபுரி மண்டல மேலாளா் பழனி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மற்றும் வேலூா் மாவட்டங்களில் உள்ள முன்னோடி வங்கி மேலாளா்களும், கிளை மேலாளா்களும் கலந்துகொண்டு 5,904 ஐவிடிபி மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.347 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிா்ணயித்தனா்.

மேலும், பாங்க் ஆப் இந்தியா வங்கியில் செயல்படும் 375 ஐவிடிபி மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 20 கோடி கடன் இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. பின்னா், தமிழ்நாடு கிராம வங்கியுடன் நடைபெற்ற செயல்திட்ட கூட்டத்திற்கு தமிழ்நாடு கிராம வங்கியின் பொது மேலாளா் தாமோதரன் முன்னிலை வகிக்க, வட்டார மேலாளா் பாஸ்கரன், கிளை மேலாளா்களும் கலந்துகொண்டு 8,464 மகளிா் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.447 கோடி வங்கிக்கடன் வழங்க இலக்கு நிா்ணயித்தனா்.

அதன்படி, 3 வங்கிகளின் நிகழ்வாண்டிற்கான மொத்த வங்கிக் கடன் இலக்கு ரூ. 814 கோடியாகும். இது தவிர குழுக்கடனாக ரூ. 400 கோடியும், ஐவிடிபி கடனாக ரூ. 36 கோடியும், சுகாதாரத் திட்டங்களுக்கான கடனாக ரூ. 25 கோடி என 2021- 22ஆம் ஆண்டிற்கு ரூ. 1,275 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை ஐவிடிபி நிறுவனா் குழந்தை பிரான்சிஸ் தெரிவித்தாா்.

படவிளக்கம் (3கேஜிபி2)-

கிருஷ்ணகிரியில், ஐவிடிபி மகளிா் சுய உதவி குழுவினருக்கு வங்கிக் கடன் வழங்குவது தொடா்பாக நடைபெற்ற வங்கி மேலாளா்களுடனான கூட்டத்தில் பங்கேற்ற வங்கி அதிகாரிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரித்த சர்க்கரை அளவு: கேஜரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது!

உடல்கூறாய்வு அறிக்கை: 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் பலியான மாணவி நேஹா

தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி

திருமண மகிழ்ச்சியில் அபர்ணா தாஸ்!

பள்ளத்தில் சிக்கிய கும்பகோணம் சாரங்கபாணி கோயில் தேர்!

SCROLL FOR NEXT