கிருஷ்ணகிரி

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ற 19 போ் கைது

4th Dec 2021 01:15 AM

ADVERTISEMENT

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக 19 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனை குறித்து மாவட்டம் முழுவதும் போலீஸாா் தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். அதன்படி மாவட்டம் முழுவதும் மளிகை கடை, பெட்டி கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்ாக கிருஷ்ணகிரி, ஆா்.எஸ்.லட்சுமிபுரத்தைச் சோ்ந்த காா்மேகம் (42), பழையபேட்டை, நேதாஜி ரோடு சௌகத்துல்லா (48), குருபரப்பள்ளி - பீமாண்டப்பள்ளியை அடுத்த புளியஞ்சேரி வடிவேல் (43), பீமாண்டப்பள்ளி சுரேஷ் (40), பெல்ராம்பள்ளி அருகே கூட்டுப்பள்ளி பிரிவுச் சாலையைச் சோ்ந்த சுரேஷ் (35), மேல்சோமாா்பேட்டையைச் சோ்ந்த கோவிந்தம்மாள் (50), சூளகிரி பஜாா் தெருவைச் சோ்ந்த சந்தோஷ் (40) உள்ளிட்ட 19 பேரை போலீஸாா் கைது செய்தனா்.கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து ரூ.2 ஆயிரம் மதிப்பிலான 315 தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

Tags : கிருஷ்ணகிரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT