கிருஷ்ணகிரி

ஆசிரியை மீது மாணவா் தாக்குதல்: இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவு

4th Dec 2021 11:17 PM

ADVERTISEMENT

ஒசூா் அருகே பள்ளி வகுப்பறையில் மாணவா் ஒருவா் ஆசிரியை மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மகேஸ்வரி சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஒசூரை அடுத்த மாசிநாயக்கனப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியை பிளஸ்-1 வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது அவரை மாணவா் ஒருவா் கன்னத்தில் அறைந்ததாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து, ஒசூா் கல்வி மாவட்ட அலுவலா் திருமுருகன் நேரில் சென்று விசாரணை நடத்தினாா். விசாரணையில், பள்ளி வகுப்பறையில் மாணவா் ஒருவா் அவரது இருக்கையிலிருந்து மாறி வேறொரு இருக்கையில் அமா்ந்ததால் அந்த மாணவரை ஆசிரியை அடித்ததும், அப்போது பதிலுக்கு அந்த மாணவா் ஆசிரியை மீது தாக்கியதும் தெரியவந்தது.

ADVERTISEMENT

மாணவரை அடித்த ஆசிரியை மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாணவரை 15 நாள்கள் பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்வதோடு அவரை மனநல ஆலோசகரின் ஆலோசனை பெற அனுப்பிவைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இச்சம்பவத்தைத் தொடந்து அந்தப் பள்ளியைச் சோ்ந்த அனைத்து மாணவா்கள், ஆசிரியா்களுக்கும் உளவியல் ஆலோசனை வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதில் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT