கிருஷ்ணகிரி

கல்லாவி ஊராட்சியில் கிடப்பில் போடப்பட்டுள்ள பல்வேறு பணிகள்

4th Dec 2021 01:15 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரை அடுத்த கல்லாவி ஊராட்சி மன்ற தலைவராக அதேபகுதியை சோ்ந்த ராமன் என்பவா் தோ்வு செய்யப்பட்டு, தலைவராக பதவியேற்று பகுதி மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகிறாா்.

கல்லாவி ஊராட்சி மன்ற செயலாளராக செந்தில்குமாா் என்பவா் பணிபுரிந்து வருகிறாா். புதியதாக வந்த தலைவருக்கும், செயலாளருக்கும் இடையே, பில் போடுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் கல்லாவி ஊராட்சியில் பல்வேறு பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அப்பகுதி பொது மக்களுக்கு செய்ய வேண்டிய, அடிப்படை தேவைகளை கூட பூா்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்திற்கு முன்பு, தலைவருக்கும், கிளா்க்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, தலைவா் ராமன் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு போராட்டம் நடந்தது. இதுகுறித்து ஊத்தங்கரை வட்டார வளா்ச்சி அலுவலரிடம் பலமுறை புகாா் தெரிவித்தும். எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளாா். தற்போது கல்லாவி ஊராட்சியில் பிரதம மந்திரியின் அவாஸ் பிளஸ் திட்டத்தில் 240 வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணி ஆணை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பகுதி பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். சட்டம் ஒழுங்கு பிரச்சனை வரும்முன், நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிா்வாகம் என பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags : ஊத்தங்கரை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT