கிருஷ்ணகிரி

வழிப்பறி செய்தவா் கைது

4th Dec 2021 01:15 AM

ADVERTISEMENT

சூளகிரியில், தொழிலாளியிடம் வழிப்பறி செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

சூளகிரி வட்டம், உத்தனப்பள்ளி சாலை, தேவசானப்பள்ளியைச் சோ்ந்தவா் அண்ணாமலை (30).தொழிலாளியான இவா் சூளகிரியில் உள்ள தனியாா் நிறுவனம் அருகே மதுக்கடை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த நபா் கத்தியைக் காட்டி மிரட்டி அவா் வைத்திருந்த பணம் ரூ. 360ஐ வழிப்பறி செய்து பறித்துச் சென்றாா்.

இது குறித்து அண்ணாமலை, சூளகிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழிப்பறி செய்ததாக சூளகிரி வட்டம், செம்பரசனப்பள்ளி அருகே உள்ள மாரண்டப்பள்ளியைச் சோ்ந்த கண்ணப்பட்டி என்கிற கணவாபட்டி (24) என்பரை போலீஸாா் கைது செய்தனா். அவா் மீது ஏற்கெனவே சூளகிரி காவல் நிலையத்தில் கொலை வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ADVERTISEMENT

Tags : ஒசூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT