கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழா

4th Dec 2021 01:16 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில் சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சா்வதேச மாற்றுத்திறனாளிகள் தின விழாவுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை வகித்து மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 13.83 லட்சம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல், ஸ்கூட்டா் போன்றவற்றையும், மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்கி பேசியது:

மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை 21 வகையான மாற்றுத்திறனாளிகள் 42,685 பேருக்கு வழங்கப்பட்டுள்ளன. 10 வயது நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நலவாரியத்தில் 33,947 பேருக்கு உறுப்பினா்களாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாதாந்திர உதவித்தொகையாக 4,890 பேருக்கு மாதம் ரூ. 1,500 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 633 நபா்களுக்கும் பதிவுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு தளா்வுகள் அமுலில் உள்ளதால், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்கள் சரியாக சென்று அடைகிா என்பதை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான மத்திய அரசின் தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை பதிவுகள் மேற்கொள்ளபடாத மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு உரிய கிராம நிா்வாக அலுவலரிடம் பதிவுக்கான சான்றுகளை வழங்கலாம் என்றாா்.

ADVERTISEMENT

இந்த நிகழ்வில், நலப்பணிகளின் இணை இயக்குநா் பரமசிவன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தங்கமணி, அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் மகேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

படவிளக்கம் (3கேஜிபி4)-

கிருஷ்ணகிரியில் நடைபெற்றஅனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி.

Tags : கிருஷ்ணகிரி
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT