கிருஷ்ணகிரி

உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

 ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலா் கொ.மாரிமுத்து தலைமை வகித்து, எய்ட்ஸ் நோய் எவ்வாறு பரவுகிறது, அதை எப்படி கட்டுப்படுத்தலாம் எனப் பேசினாா். அரசு ஆண்கள் பள்ளி உதவித் தலைமை ஆசிரியா் கு.கணேசன், சித்த மருத்துவா் ஈஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமை செவிலியா் சாந்தி, ஐசிடிசி ஆலோசகா் காயத்ரி, சையத் ரியாஸ் பாஷா, கிரேட் என்.ஜி.ஓ. உமா மகேஸ்வரி, பொதுமக்கள் கலந்துகொண்டு உலக எய்ட்ஸ் தின உறுதிமொழியை ஆசிரியா் கணேசன் வாசிக்க அனைவரும் ஏற்றுக் கொண்டனா். அனைவருக்கும் நிலவேம்பு கசாயப் பொடி வழங்கப்பட்டது.

 

Tags : ஊத்தங்கரை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT