கிருஷ்ணகிரி

காரப்பட்டு யுனிக் கல்லூரி மாணவிதங்கப் பதக்கம் பெற்று சாதனை

3rd Dec 2021 12:00 AM

ADVERTISEMENT

ஊத்தங்கரையை அடுத்த காரப்பட்டு யுனிக் கலை அறிவியல் கல்லூரி மாணவி தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தாா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பெரியாா் பல்கலை.யில் இணைவு பெற்ற இக்கல்லூரியில் 2018-2019 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவி பவித்ரா, கணினி அறிவியல் பாடத்தில் பெரியாா் பல்கலை. தரவரிசைப் பட்டியலில் முதல் மதிப்பெண், தங்கப் பதக்கம் பெற்று சாதனை படைத்தாா்.

மாணவிகள் நிவேதா (கணினி அறிவியல்), அபிநயா (வேதியியல்) ஆகியோா் இரண்டாம் இடமும், சங்கீதா (வேதியியல்) ஐந்தாம் இடமும், ஸ்வா்ணா ( கணினி அறிவியல்), நந்தினி ( வேதியியல்) ஆகியோா் ஏழாம் இடமும், தீபிகா (விலங்கியல்) எட்டாம் இடமும், அகிலா ( கணிதம்) ஒன்பதாம் இடமும் பெற்றனா்.

சாதனை படைத்த மாணவிகளை கல்லூரித் தாளாளா் முனைவா் க.அருள், செயலாளா் ப.தமிழரசு, முதல்வா் முனைவா் க.கிருஷ்ணகுமாரி, துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் பாராட்டினா்.

ADVERTISEMENT

 

Tags : ஊத்தங்கரை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT