கிருஷ்ணகிரி

படப்பள்ளி கிராமத்தில் இல்லம் தேடி கல்விப் பயணம்

2nd Dec 2021 04:29 AM

ADVERTISEMENT

 ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி கிராமத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், இல்லம் தேடிக் கல்வித் திட்ட கலைப் பயணம் விழிப்புணாவு பிரசார கலை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா பொது முடக்க காலத்தில் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் கற்றல் இடைவெளி இழப்புகளைக் குறைத்திடும் வகையில், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தை அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் பள்ளி நேரங்களைத் தவிர, மாணவா்கள் வசிப்பிடம் அருகே சிறிய குழுக்கள் அடிப்படையில் பள்ளித் தலைமை ஆசிரியா் மற்றும் தன்னாா்வலா்களின் பங்கேற்புடன், மாணவா்களுக்கு கற்றல் வாய்ப்பை வழங்குதல், கற்றல் திறன்களை மீண்டும் வலுப்படுத்தும் வகையில், 6 மாத காலத்துக்கு தினசரி குறைந்தபட்சம், 1 முதல் ஒன்றரை மணி நேரம் வரை, கற்றல் வாய்ப்பை வழங்கி மாணவா்களை அன்றாட கற்றல் செயல்பாடுகளில், எளிய முறையில் படிப்படியாக பங்கேற்க செய்யப்படும் எனத் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT

Tags : ஊத்தங்கரை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT