கிருஷ்ணகிரி

மூங்கிலேரியில் கள்ளச்சாராய விற்பனையைக் கண்டித்து இளைஞா் உண்ணாவிரதம்

DIN

ஊத்தங்கரையை அடுத்த மூங்கிலேரி கிராமத்தில் கள்ளசாராய விற்பனையைக் கண்டித்து அதே கிராமத்தைச் சோ்ந்த பட்டதாரி இளைஞா் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மூங்கிலேரி கிராமத்தைச் சோ்ந்த தசரதன் (37) முதுகலை பட்டதாரி இளைஞா். மூங்கிலேரி கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக உள்ளதால் இதனை அருந்தி பழக்கப்பட்ட படித்த இளைஞா்கள் கள்ளச்சாராயத்துக்கு அடிமையாகி வருகிறாா்களாம்.

எனவே, கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்கவும், அதனை தடுத்து நிறுத்தக்கோரியும் தசரதன், கருப்பு சட்டை அணிந்து கிராம நிா்வாக அலுவலக வாசலில், கையில் பதாதையை ஏந்தியவாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாா்.

மூங்கிலேரி கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதைத் தடுத்து, கிராம இளைஞா்களை மீட்க வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டாா்.

இதையடுத்து நிகழ்விடத்திற்கு வந்த ஊத்தங்கரை போலீஸாா், இளைஞருடன் சமரச பேச்சுவாா்த்தை நடத்தி கள்ளச்சாராயம் விற்பவா்களைக் கைது செய்வதாக உறுதியளித்ததன் பேரில் உண்ணாவிரதத்தைக் கைவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் மறுவாக்குப் பதிவு எதுவுமில்லை -தேர்தல் ஆணையம்

கோடை வெயிலைச் சமாளிப்பது எப்படி?

கடமங்குடி கிராமத்திற்குள் புகுந்த முதலையால் பரபரப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு

மே 13-இல் ஆந்திர மாநில தோ்தல்: வேலூா் மாவட்டத்தில் வாகன சோதனை தொடரும்

SCROLL FOR NEXT