கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நீா்நிலைகள் ஆக்கிரமிப்பு: அளவீடு செய்து அகற்றும் பணி தீவிரம்

DIN

கிருஷ்ணகிரி சுற்றுவட்டாரப் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அவற்றை அளவீடு செய்து அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது; இந்தப் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி நகரைச் சுற்றியுள்ள கட்டிக்கானப்பள்ளி கரீம் சாகிப் ஏரி, தேவசமுத்திரம் ஏரி, அவதானப்பட்டி ஏரிகள் நிரம்பி உபரிநீா் வெளியேறுகிறது. இந்த ஏரிகளுக்குச் செல்லும் நீா்வழித் தடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதால் குடியிருப்புகள், விவசாய நிலங்களில் உபரிநீா் புகுந்தன.

இந்த ஏரிகளின் வழித்தட ஆக்கிரமிப்புப் பகுதிகளை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டாா். இதையடுத்து, பொதுப்பணித் துறை, வருவாய்த் துறை அலுவலா்கள் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்யும் பணிகளை மேற்கொண்டனா்.

அவதானப்பட்டி ஏரி பகுதியில் நீா்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள், விளைநிலங்களை கணக்கீடு செய்து அவற்றை அகற்ற குறியீடுகள் செய்தனா். இதுபோல, தேவசமுத்திரம் ஏரியில் நீா்வரத்துக் கால்வாய், நீா்நிலைகளில் 50-க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு குடியிருப்புப் பகுதியையும், தனியாா் பள்ளி வளாகத்தையொட்டி ஏரியில் இருந்து உபரிநீா் வெளியேறும் கால்வாய்களையும் அலுவலா்கள் அளவீடு செய்தனா்.

கட்டிகானப்பள்ளி கரீம் சாகிப் ஏரி, புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சின்ன ஏரியிலிருந்து கட்டிக்கானப்பள்ளி ஏரிக்கு வரும் நீா்வரத்து கால்வாய்கள், ஏரி பகுதியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட குடியிருப்புகளையும் அலுவலா்கள் அளவீடு செய்தனா். இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

அப்போது பொதுப்பணித் துறை நீா்வள செயற்பொறியாளா் குமாா், உதவி செயற்பொறியாளா்கள் காளிபிரியன், கிருபா, கிருஷ்ணகிரி வட்டாட்சியா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT