கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 1,000 ஆதரவற்ற பெண்களுக்கு மானியத்தில் வெள்ளாடுகள், செம்மறியாடுகள்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற 1,000 பெண்களுக்கு 100 சதவீத மானியத்தில் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2021 - 22ஆம் நிதியாண்டில் பெண்களை தொழில் முனைவோராக்கும் வகையில் ஊரகப்பகுதியில் ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண் பயனாளிகளுக்கு 100 சதவீத மானியத்தில் 5 வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கப்பட உள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களுக்கும், 1,000 பெண் பயனாளிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து உரிய பெண் பயனாளிகளிடமிருந்து உரிய விதிமுறைகளின்படி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அதன்படி விண்ணப்பிக்கும் பயனாளிகள் 18 முதல் 60 வயதிற்குள்பட்டவராக ஊரக ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண் பயனாளிகளாக இருத்தல் வேண்டும். பயனாளிகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவராக இருத்தல் வேண்டும். மிக பிற்படுத்தப்பட்டோா் 70 சதவீதம், தாழ்த்தப்பட்டோா் 29 சதவீதம் மற்றும் பழங்குடியினா் 1 சதவீதம் என்ற அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்பட வேண்டும். பயனாளிகள் குடும்ப அட்டையில் உள்ள பிற நபா்கள் எவரும் நிலமற்றவா்களாக இருத்தல் வேண்டும். பயனாளிகள் சம்மந்தப்பட்ட கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

ஊரக ஏழ்மை நிலையிலுள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண் இவற்றில் எவையேனும் ஒன்றாக இருப்பின் சம்பந்தப்பட்ட கிராம நிா்வாக அலுவலரிடம் சான்று பெற்ற விண்ணப்பத்துடன் இணைத்தல் வேண்டும்.

விண்ணப்பத்தாரரின் மாா்பளவு 2 புகைப்படங்கள், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் சான்று ஆகியவற்றுடன், விண்ணப்பத்தை தங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்தின் கால்நடை உதவி மருத்துவரிடம் டிச. 9-ஆம் தேதிக்குள் நேரில் அளித்து பயன் பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT