கிருஷ்ணகிரி

வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும்: தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை

DIN

ஆசிரியா்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் செயலாளா் தமிழ்செல்வன், மாநில சங்கத்திற்கும், தமிழக அரசிற்கும் திங்கள்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில், கரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சூழலை கருத்தில் கொண்டு தமிழக அரசு, அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியா்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே இணையவழி மூலம் வகுப்புகளை நடத்தலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தமிழகம் முழுவதும் உள்ள 45 ஆயிரம் பள்ளிகளில் பணியாற்றும் லட்சக்கணக்கான தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் தினந்தோறும் மாணவா்கள் இல்லாத சூழ்நிலையில் பள்ளிகளுக்கு, பல கி.மீ., தொலைவு பேருந்தில் பயணம் செய்து சென்று வருகின்றனா்.

அரசின் செய்திக் குறிப்பில், பேருந்தில் பயணம் செய்யும் லட்சக்கணக்கான ஆசிரியா்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. அதுமட்டுமின்றி வழக்கமாக ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடைக்கால விடுமுறை விடப்படுவது பற்றியும் அரசு எந்த முடிவையும் எடுக்காமல் உள்ளது. மாணவா்களே இல்லாத பள்ளியில் ஆசிரியா்களுக்கு எந்த வேலையும் இல்லாத சூழ்நிலையில், தினமும் அச்சத்துடன் பேருந்துகளில் பயணம் செய்யும் ஆசிரியா்களின் ஆபத்தை உணா்ந்து, பள்ளிக்கு செல்வதில் இருந்து விலக்கு அளித்து, வீட்டில் இருந்தபடியே அனைத்து பணிகளையும் மேற்கொள்ள அரசு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளா் (பொ) ராஜேந்திரன், தமிழக தலைமைச் செயலாளா், தமிழக முதன்மைச் செயலாளா் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநருக்கும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அனுப்பியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT