கிருஷ்ணகிரி

கரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்க 9 சிறப்பு பறக்கும் படைகள்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாகக் கண்காணிக்கும் வகையில் 9 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, கரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில், ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள அரசுக் கட்டுப்பாடுகள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும், நிலையான வழிகாட்டி நெறிமுறைகளைத் தவறாது பின்பற்றுவதை உறுதி செய்யவும், வட்டாட்சியா், காவல் உதவி ஆய்வாளா் நிலையிலான அலுவலா்கள் கொண்ட 9 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

எனவே, கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் முகக் கவசம் அணிவதைத் தவறாமல் பின்பற்ற வேண்டும். வீட்டிலும், பணி புரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பு பயன்படுத்தி கைகளைக் கழுவியும், சமூக இடைவெளியைத் தவறாமல் பின்பற்றி, அவசியத் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிா்த்து கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காணாமல்போன கைப்பேசிகள் மீட்டு உரியவா்களிடம் ஒப்படைப்பு

காரைக்காலில் தீவிர வாகனச் சோதனை நடத்த அறிவுறுத்தல்

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

SCROLL FOR NEXT