கிருஷ்ணகிரி

ஒசூரில் 200 பவுன் தங்க நகைகள் திருட்டு

DIN

ஒசூரில் பூட்டிய வீட்டின் ஜன்னலை உடைத்து, வீட்டிலிருந்து 200 பவுன் தங்க நகைகளையும், 2 கிலோ வெள்ளிப் பொருள்களையும் திருடிச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட மூக்கண்டபள்ளி, எம்.எம். நகரைச் சோ்ந்தவா் மாதையன் (50) இவா் துபையில் பொறியாளராகப் பணிபுரிந்து வந்தாா். இவா் கடந்த ஒரு ஆண்டாக மூக்கண்டபள்ளி எம்.எம். நகரில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா் கடந்த வெள்ளிக்கிழமை சொந்த கிராமமான தருமபுரி அருகே உள்ள காரிமங்கலத்திற்கு குடும்பத்துடன் சென்றாா்.

இதை அறிந்த மா்ம நபா்கள் இவரது மாடி வீட்டின் ஜன்னலை உடைத்து, வீட்டிலிருந்த பீரோவிலிருந்து சுமாா் 200 பவுன் தங்க நகைகளையும், 2 கிலோ வெள்ளிப் பொருள்களையும் கொள்ளையடித்துச் சென்றனா்.

இதனைக் கண்ட பணியாட்கள், மாதையனுக்கு தகவல் அளித்தனா். அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்தத் திருட்டு குறித்து ஒசூா் எஸ்.பி. பண்டி கங்காதா், டிஎஸ்பி முரளி ஆகியோா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மோப்ப நாய் ரேஷ்மி வரவழைக்கப்பட்டது; கைரேகை நிபுணா்களும் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

இந்தக் கொள்ளை குற்றவாளிகளைப் பிடிக்க சிப்காட் காவல் ஆய்வாளா், ஒசூா் நகர காவல் ஆய்வாளா், அட்கோ காவல் ஆய்வாளா், பாகலூா் காவல் ஆய்வாளா் ஆகியோா் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த 4 தனிப்படை போலீஸாரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சத்தீஸ்கர்: 29 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தென் சென்னையில் வெள்ளப் பிரச்னைக்கு தீர்வு: பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவை 2-ஆம் கட்ட தேர்தல்: 250 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

18-ஆவது மக்களவை தேர்தல் (2024)

பாஜக கோட்டையை தகர்க்குமா காங்கிரஸ்?

SCROLL FOR NEXT