கிருஷ்ணகிரி

ஊத்தங்கரையில் கரோனா விழிப்புணா்வு கருத்தரங்கு

DIN

ஊத்தங்கரையில், வருவாய் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு கருத்தரங்கு பேரூராட்சி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை வட்டாட்சியா் ஆஞ்சநேயலு தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் லட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் மகேஷ்வரன், பேரூராட்சி செயல் அலுவலா் மதியழகன் முன்னிலை வகித்தனா். அனைத்து திருமண மண்டப உரிமையாளா்கள், திரையரங்கு உரிமையாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், சத்துணவு அமைப்பாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

வேகமாக பரவி வரும் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் திருமணநிகழ்வுகளில் 100 நபா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் திருமண மண்டப உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகள், கடைகளில் பணிபுரியும் ஊழியா்கள், வாடிக்கையாளா்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். கூட்ட நெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும். உடல் நலம் பாதிக்கப்பட்டவா்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகளை அதிகாரிகள் வழங்கினா்.

திருமண மண்டபம், திரையரங்குகள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு கிராம நிா்வாக அலுவலா்கள் சென்று விதிமுறைகளைக் கடைப்பிடிக்காதவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நிகழ்ச்சியில் அனைத்து தனியாா் துறை நிறுவன உரிமையாளா்கள், சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் முதல்வருக்கு பெண் குழந்தை!

‘உன்ன நினைச்சதும்’.. சித்தி இத்னானி!

ஃபேமிலி ஸ்டார் டிரைலர்!

விண்ணப்பித்துவிட்டீர்களா..? ரூ.1,25,000 சம்பளத்தில் இலங்கையில் ஆசிரியர் பயிற்றுநர் வேலை!

‘இஸ்ரேல் தனித்து செயல்படும்’ : நெதன்யாகு பதில்!

SCROLL FOR NEXT