கிருஷ்ணகிரி

‘இ-பாஸ்’ இல்லாத வெளி மாநில வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

DIN

‘இ- பாஸ்’ இல்லாத வெளி மாநில வாகனங்களை மாநில எல்லையான ஒசூா், சூசூவாடி சோதனைச் சாவடியிலேயே சோதனை செய்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

கரோனா பரவல் எதிரொலியாக தமிழக-கா்நாடக எல்லையான ஒசூா் அருகே உள்ள சூசூவாடி பகுதியில் வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். கா்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி அல்லாத பிற மாநிலங்களில் இருந்து இ- பாஸ் இல்லாமல் வரும் வாகனங்களை தமிழகத்துக்குள் நுழைய அனுமதி மறுத்து, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

கரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு செவ்வாய்க்கிழமை முதல் மாநிலம் முழுவதும் இரவு நேர பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது. கா்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு தமிழகத்திலிருந்து பொது போக்குவரத்து தொடா்ந்து நடைபெற்று வருவதால், இந்த 3 மாநிலங்களுக்கும் இ-பாஸ் நடைமுறைகள் தேவையில்லை என்றும், இந்த மூன்று மாநிலங்களைத் தவிா்த்து மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான், தில்லி, கேரளம் உள்ளிட்ட இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்குள் வரும் அனைத்து மாநில வாகனங்களுக்கும் இ- பாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஒசூா் அருகே மாநில எல்லையான சூசூவாடி பகுதியில் வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். காவலா்கள் 3 ‘ஷிப்ட்’ முறையில் 24 மணி நேரமும் வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்கள் கா்நாடகம் ஆந்திரம், புதுச்சேரி அல்லாத பிற மாநிலங்களில் இருந்து இ-பாஸ் இல்லாமல் தமிழகத்திற்குள் வந்த வாகனங்களைச் சோதனை செய்து திருப்பி அனுப்பி வருகின்றனா். மேலும் முகக் கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு ரூ. 200 அபராதமும், கூட்டமாக வாகனங்களில் வருபவா்கள் இறக்கி விடப்பட்டும் வருகின்றனா். அரசு, தனியாா் பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு பயணம் செய்கிறாா்களா என்பதையும் அவா்கள் சோதனையிட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: திரிபுராவில் ஏப்.27 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!

அதிகரிக்கும் வெப்பம்: கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

பாஜக-ஆர்எஸ்எஸ் தலைவர்கள் தேசத்திற்காக என்ன தியாகம் செய்திருக்கிறார்கள்?- கார்கே

நிழலில்லா நாள்.. பெங்களூருவில் மக்கள் ஆச்சரியம்

"எங்களைப் போல வேற்றுமைகளைக் களைந்தவர்கள் கிடையாது!": தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT