கிருஷ்ணகிரி

வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும்:டி.செங்குட்டுவன் எம்எல்ஏ

DIN

கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்களுக்கான பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ கோரிக்கை வைத்துள்ளாா்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் அலுவலரான வி.ஜெயசந்திரபானு ரெட்டிக்கு அவா் சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம்:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த 6-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்காளா்கள் பதிவிட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன.

இந்த இயந்திரங்களின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த 24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் வரும் அரசு, தனியாா் மற்ரும் இருசக்கர வாகனங்களை நுழைவாயில் அருகில் உள்ள மைதானத்துக்குள் மட்டுமே நிறுத்த அனுமதிக்க வேண்டும். வேறு எந்தப் பகுதிகளிலும் நிறுத்த அனுமதிக்கக் கூடாது.

பிஎச்இஎல் நிறுவனத்தைச் சோ்ந்த பொறியாளா்களையோ, அந் நிறுவனத்தைச் சோ்ந்த பிற அதிகாரிகளையோ அனுமதிக்கக் கூடாது. கண்காணிப்பு கேமரா 24 மணி நேரமும் இயங்குவதை உறுதிசெய்திட வேண்டும். குப்பம் சாலை, சென்னை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள வைபை, ப்ளுடூத் இணைப்புகளைத் துண்டிக்க வேண்டும். 

24 மணி நேரமும் தங்குதடையின்றி மின்சாரம் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். கிருஷ்ணகிரி சட்டப் பேரவை தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்தில் 14 மேஜைகள் உண்டு. அவை தலா 7 மேஜைகள் என இரு அறைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

மீண்டும் ஒரே அறையில் 14 மேஜைகளையும் அமைக்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் வெளிப்புறம் இடது பக்கத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படவில்லை. அங்கு இரண்டு கேமராக்கள் பொருத்தி கண்காணிப்பை மேலும் பலப்படுத்த வேண்டும். திமுக வேட்பாளரான எனது வேண்டுகோளை நடைமுறைபடுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல் பந்தில் சிக்ஸர் விளாசியது குறித்து மனம் திறந்த சமீர் ரிஸ்வி (விடியோ)

கம்பீர அழகு.. இது நம்ம டாப்ஸி!

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

SCROLL FOR NEXT