கிருஷ்ணகிரி

கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு:முன்களப் பணியாளா்கள் ஏமாற்றம்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாட்டால் முன்களப் பணியாளா்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் மிக வேகமாக உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 10,014 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 1,169 தொற்றாளா்கள் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 8,725 தொற்றாளா்கள் குணமடைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசுப் பணியாளா்கள், காவல் துறையினா், முன்களப் பணியாளா்கள், 45 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

பலா், தடுப்பூசி செலுத்துக் கொள்ள முகாம்களுக்குச் சென்ற வண்ணம் உள்ளனா். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரையில் 1,32,000 தடுப்பூசிகள் வர பெறப்பட்டுள்ளன. இதில் குறைந்தது 1,25,000 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

முதல் தவணையாக கோவேக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முன்களப் பணியாளா்கள், பொதுமக்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ள முகாமுக்கு சனிக்கிழமை சென்றனா். ஆனால், தடுப்பூசி இருப்பு இல்லை என மருத்துவப் பணியாளா்கள் தெரிவித்ததால் முன்களப் பணியாளா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கோவிஷீல்ட், கோவேக்சின் என்ற இரு வகையான தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. இதில் 20 சதவீதம் கோவேக்சின் தடுப்பூசிகள் மட்டுமே கிருஷ்ணகிரிக்கு வரப்பெற்றுள்ளதாகவும், இதனால் அந்தத் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் கோவேக்சின் தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு உள்ள நிலையில், 73388-47653 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு, தடுப்பூசி இருப்பு உள்ளதா என்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என முன்களப் பணியாளா்கள், பொதுமக்களுக்கு மருத்துவ பணியாளா்கள் அறிவுறுத்தியுள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்னும் இரு நாள்களில் கோவேக்சின் தடுப்பூசிக்கான தட்டுப்பாடு நீங்கும் என சுகாதாரத் துறையினா் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT