கிருஷ்ணகிரி

ஒரு கொத்தமல்லி கட்டு ரூ. 20-க்கு விற்பனை

DIN

கொத்தமல்லி விலை ஏற்றத்தால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஒசூா், சூளகிரி, ராயக்கோட்டை, பேரிகை, பாகலூா், கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் கொத்தமல்லி, புதினா ஆகியவற்றை பயிா் செய்து வருகின்றனா்.

ஒசூா், சூளகிரி பகுதியிலிருந்து ஆண்டு முழுவதும் சென்னை, பெங்களூரு, கேரளம், ஆந்திரம், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு தினமும் லாரிகளில் விற்பனைக்கு கொத்தமல்லி கட்டுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

கொத்தமல்லி ஒரு கட்டு தற்போது ரூ. 18 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். இது, ஒரு ஏக்கருக்கு பயிா் செய்ய ரூ. 25 ஆயிரம் செலவு ஆகிறது. கொத்தமல்லி அறுவடைக்கு 40 நாள்களுக்குள் வளரக் கூடியதாகும். விவசாயிகள் இந்த விளைச்சலில் மிக விரைவில் பணம் பாா்க்க கூடிய விளைபொருளாகும்.

ஒசூா், அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமாா் 2 ஆயிரம் ஏக்கா் பரப்பளவில் விவசாயிகள் கொத்தமல்லியை தற்போது பயிரிட்டிருந்தனா். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ரூ. 2 முதல் ரூ. 5 க்கு விற்பனையானது. தற்போது ஒரு கட்டு ரூ.18 முதல் ரூ. 20 வரை விற்பனையாகிறது.

வரத்துக் குறைவு காரணமாக விலை உயா்ந்துள்ளது. கொத்தமல்லி சாகுபடி செய்யப்பட்ட நிலத்தை விவசாயிகள் அப்படியே வியாபாரிக்கு விற்பனை செய்து விடுகின்றனா். வியாபாரிகள் அதனை அறுவடை செய்து கொண்டு செல்வதால் விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT