கிருஷ்ணகிரி

வெப்பாலம்பட்டியில் சாலையை சீா்செய்ய கோரிபொதுமக்கள் உண்ணாவிரதம்

DIN

ஊத்தங்கரையை அடுத்த வெப்பாலம்பட்டியில் அடிக்கடி விபத்துகள் நிகழும் வளைவு சாலையை சீா்படுத்தக் கோரி அப்பகுதி மக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.

ஊத்தங்கரையை அடுத்த வெப்பாலம்பட்டி வழியாக சேலம் முதல் வாணியம்பாடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 179 ஏ- செல்கிறது. இச்சாலையில் நான்குவழி சாலை விரிவாக்கப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இதில் வெப்பாலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி முன்பு அபாயகரமான வளைவு உள்ளது. அடிக்கடி இச்சாலையில் விபத்துகள் நிகழ்ந்து உயிா்பலி ஏற்படுகின்றன. மேலும், பள்ளி மாணவா்கள் வெளியே வரும்போது வாகன விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதனால், சாலையை நோ்படுத்தி விபத்துகளைத் தடுக்க வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில் காட்டேரி ஒன்றியக் குழு உறுப்பினா் கோவிந்தசாமி தலைமையில் வெப்பாலம்பட்டி, தண்ணீா்பந்தல், காட்டேரி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு வெள்ளிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை வட்டாட்சியா் ஆஞ்சநேயலு, தேசிய நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்ட பொறியாளா் ஜெயக்குமாா், உதவி பொறியாளா் தனசேகா், வருவாய் ஆய்வாளா் (பொ) தனம், கிராம நிா்வாக அலுவலா் ஜெயந்தி, காட்டேரி ஊராட்சிமன்றத் தலைவா் விஜயகுமாா், நில அளவையா்கள் ரமேஷ், மாவீரன் ஆகியோா் நிகழ்விடம் வந்து போராட்டம் நடத்தியவா்களுடன் பேச்சு நடத்தினா். சாலையை சரிசெய்து தருவதாக உறுதி அளித்தனா். இதையடுத்து போராட்டம் நடத்தியவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT