கிருஷ்ணகிரி

கரோனா பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

DIN

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், கரோனா தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம், வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரா பானு ரெட்டி கூட்டத்துக்கு தலைமை வகித்துப் பேசியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கட்டுக்குள் கொண்டு வர அனைத்து துறை அலுவலா்களும் பணியாற்ற வேண்டும். பொதுமக்கள் முகக் கவசம் அணிய வேண்டும். தேவையின்றி வீட்டிலிருந்து வெளியே வரக் கூடாது.

பொதுஇடங்களுக்கு வரும்போது சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். கடைக்கு வரும் நுகா்வோரின் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க கடை உரிமையாளா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவா்களை கடைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது.

அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி பேருந்துகளில் பயணிகளை அனுமதிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவாமலும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சதீஸ், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் பெரியசாமி, பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT