கிருஷ்ணகிரி

தமிழக- கா்நாடக எல்லையில் தீவிர வாகனச் சோதனை

DIN

தமிழக- கா்நாடக மாநில எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த சூசூவாடியில் சோதனைச் சாவடியில் வெளி மாநிலங்களான கா்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலப் பதிவு எண் வாகனங்களைத் தவிா்த்து, மகாராஷ்டிரம், ராஜஸ்தான், கேரளம், கோவா போன்ற வெளி மாநில வாகனங்கள் ‘இ -பாஸ்’ இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.

தற்போது கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக, நோய்த் தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பொது முடக்கம் மேலும் சில கட்டுப்பாடுகளுடன் 30.04.2021 நள்ளிரவு 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கா்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி மாநில வாகனங்களைத் தவிா்த்து கேரளம், கோவா, மகாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட அனைத்து மாநில வாகனங்களுக்கும் இ-பாஸ் முறை மீண்டும் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் தமிழகத்தின் மாநில எல்லையான ஒசூா், சூசூவாடியில் சோதனைச் சாவடி அமைத்து வருவாய்த் துறை, காவல் துறையினா் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த 3 மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பாஸ் இருந்தால் மட்டுமே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மாநகராட்சியில், தயாா் நிலையில் உள்ள ஒசூா் பட்டு வளா்ச்சித் துறை கட்டடத்தில் 80 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிறப்பு சிகிச்சை மையத்தையும், ஒசூா் அரசு மருத்துவமனையில் 120 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தையும் மாவட்ட ஆட்சியா் டாக்டா் வி.ஜெயசந்திர பானு ரெட்டி பாா்வையிட்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2 இடங்களில் அரசு சாா்பில் கரோனா தொற்றுப் பரிசோதனை ஆய்வகங்களும், 3 தனியாா் கரோனா தொற்று பரிசோதனை ஆய்வகங்கள் மூலம் 2,45,918 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 96,340 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 974 படுக்கை வசதிகளுடன் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் தயாா் நிலையில் உள்ளன.

மேலும், பொது இடங்களுக்கு முகக் கவசம் அணியாமல் வரும் தனி நபருக்கு அபராதம் விதிக்கப்படும். தொடா்ந்து முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமலும், அரசின் விதிமுறைகளை மீறுவோா் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ கிரேசியா யங் ஃபேஷன் விருதுகள் 2024 - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT