கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுக, திமுக வேட்பாளா்கள் வாக்களிப்பு

7th Apr 2021 09:33 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக, திமுக வேட்பாளா்கள் தங்களது வாக்குகளை செலுத்தினா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட காவேரிப்பட்டணத்தில் ஜின்னா சாலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடி மையத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி அதிமுக வேட்பாளருமான கே.பி.முனுசாமி எம்.பி. தனது மனைவியுடன் சென்று வாக்களித்தாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

கரோனா தொற்றுக் காலத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில், தோ்தல் ஆணையம் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. வாக்காளா்களுக்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் தோ்தல் ஆணையம் செய்துள்ளது என்றாா்.

கிருஷ்ணகிரி ஜக்கபன் நகரில் உள்ள தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் கே.அசோக்குமாா் தனது வாக்கைப் பதிவு செய்தாா். 

ADVERTISEMENT

பா்கூா் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் அ.கிருஷ்ணன், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள தளிஅள்ளி, ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் குடும்பத்துடன் சென்று தனது வாக்கைப் பதிவிட்டாா்.

திமுக வேட்பாளா்கள்:

கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளரும் மாவட்டச் செயலாளருமான டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, தனது வாக்கை, அவரது சொந்த கிராமமான வெலகலஅள்ளி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடி மையத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்தாா்.

பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் தே.மதியழகன், அவரது சொந்த கிராமமான குட்டூா் கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடியில் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தாா்.

வேப்பனப்பள்ளி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் பி.முருகன் எம்எல்ஏ தனது சொந்த கிராமமான தளவாய்ப்பள்ளி கிராமத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடிக்கு குடும்பத்துடன் சென்று வாக்களித்தாா். 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT