ஒசூா் சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக, திமுக வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு வாக்கு பதிவு செய்தனா்.
அதிமுக வேட்பாளா் ஜோதி, முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ணாரெட்டி ஆகிய இருவரும் பஸ்தியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் வாக்குப் பதிவு செய்தனா்.
திமுக வேட்பாளா் ஒய்.பிரகாஷ், பேளகொண்டப்பள்ளியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியிலும், அமமுக வேட்பாளா் மாரேகவுடா தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள ஜான்போஸ்கோ மேல்நிலைப் பள்ளியிலும் வாக்குகளைப் பதிவு செய்தனா்.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் மசூத், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கீதா லட்சுமி ஆகியோரும் காலையிலேயே வாக்குகளைப் பதிவு செய்தனா்.
ADVERTISEMENT