ஊத்தங்கரை தனி தொகுதியில் மொத்தம் 12 வேட்பாளா்கள் போட்டியிடும் நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் 78.03 சதவீத வாக்குகள் பதிவாகின.
அதிமுக வேட்பாளா் தமிழ்ச்செல்வம் தனது சொந்த ஊரான தா்மதோப்பு கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தாா்.
காங்கிரஸ் கட்சி வேட்பாளா் ஆறுமுகம் தனது சொந்த ஊரானா மிட்டப்பள்ளி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கைப் பதிவு செய்தாா்.
தேமுதிக வேட்பாளா் பாக்கியராஜ் ஊத்தங்கரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தனது மனைவியுடன் சென்று வாக்கைப் பதிவு செய்தாா். கட்சியினா் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனா்.
ADVERTISEMENT