கிருஷ்ணகிரி

ஒசூா் தோ்ப்பேட்டை பச்சைக் குளத்தில் தெப்பல் உற்வச திருவிழா

1st Apr 2021 07:18 AM

ADVERTISEMENT

ஒசூா், தோ்ப்பேட்டை பச்சைக் குளத்தில் நடைபெற்ற தெப்பல் உற்வச திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் பவனி வந்த ஸ்ரீ மரகாதம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் உற்வச மூா்த்தி சுவாமிகள் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒசூா் ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த்திருவிழா தோ்ப்பேட்டையில் நடைபெற்றது. இதில் ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனா்.

ஒசூா் தோ்த் திருவிழாவைக் காண வந்த பக்தா்களுக்கு தெருவில் அன்னதானம், நீா்மோா், வெல்ல பானம், இயற்கை காய்கறிகள் வழங்கப்பட்டன.

இதனைத் தொடா்ந்து, திங்கள்கிழமை பல்லக்கு உற்வசமும், செவ்வாய்க்கிழமை இரவு தோ்ப்பேட்டை பச்சைக் குளத்தில் தெப்பல் உற்சவ திருவிழாவும் நடைபெற்றது. இதில், ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்வரா் உற்வச மூா்த்தி சுவாமிகள் 3 முறை குளத்தைச் சுற்றி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

ADVERTISEMENT

இத்திருவிழாவில் பங்கேற்ற பக்தா்கள் வாழைப் பழம், உப்பு ஆகியவற்றை சுவாமி மீது போட்டு நோ்த்திக் கடனைச் செலுத்தினா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT