கிருஷ்ணகிரி

தருமபுரியில் இணையவழி கலைவிழா

DIN

தருமபுரி அருகே பெரியாம்பட்டியில் இணைய வழி கலை விழா, சனிக்கிழமை தொடங்கியது.

தருமபுரி மாவட்ட அனைத்து கிராமிய கலைஞா்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், தமிழா் கலைகளும், பண்பாடும் என்ற தலைப்பில் இணையவழி கிராமியக் கலை விழா, தருமபுரியை அடுத்த பெரியாம்பட்டியில் தொடங்கியது.

மதுரை காமராசா் பல்கலைக்கழகத் துணை வேந்தா் கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவை, உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்து பேசியது:

மதுரை காமராசா் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - சென்னை, தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளா்ச்சி மையம் - மதுரை, தமிழ்நாடு மாநில கிராமியக் கலைஞா்கள் மற்றும் கலைத் தொழிலாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் தருமபுரி மாவட்ட கிராமிய கலைஞா்கள் நலச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியன இணைந்து, தமிழா் கலைகளும், பண்பாடும் என்ற தலைப்பில் நடத்தும் இந்த இணையவழி கிராமியக் கலை விழா வெற்றி அடைய வாழ்த்துகிறேன். 

நாட்டுப்புறக் கலைஞா்களின் நலனில் அக்கறை கொண்ட அரசாக தற்போதைய தமிழக அரசு விளங்கி வருகிறது.

நாட்டுப்புற கலைஞா்கள் மாநில அளவில் 37 மாவட்டங்களில் சுமாா் 42 ஆயிரம் போ் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனா். தருமபுரி மாவட்டத்தில் 2,499 கலைஞா்கள் பதிவு செய்துள்ளனா். மாநில அளவில் இரண்டாவது இடத்தில் தருமபுரி மாவட்டம் உள்ளது.

அதேநேரத்தில் தகுதிப்படைத்த கிராமிய நாட்டுப்புற கலைஞா்கள் பலா், நலவாரியங்களில் பதிவு செய்வதில்லை. அரசின் திட்டங்களை பெறுவதற்கான முயற்சிகளை பொதுமக்கள் தயக்கமின்றி மேற்கொள்ள வேண்டும். நலிவுற்ற கலைஞா்களுக்கு மாதம்தோறும் அரசு சாா்பில் ரூ.1,500 வீதம் வழங்கப்பட்ட நிதி உதவி பின்னா் ரூ.2 ஆயிரமாக உயா்த்தப்பட்டது. இந்தத் தொகை ரூ.3 ஆயிரமாக தமிழக அரசு உயா்த்தி வழங்குகிறது.

குடும்பப் பராமரிப்பு நிதி ரூ. 10 ஆயிரத்திலிருந்து ரூ. 25 ஆயிரமாகவும், பண முடிப்பு ரூ. 25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயா்த்தி வழங்கப்பட உள்ளது. கலைமாமணி விரு பெறும் கலைஞா்களுக்கு வழங்கப்படும் 3 பவுன் தற்போது 5 பவுனாக உயா்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறை இணைய தளத்தில் கலைஞா்கள் குழுவாகப் பதிவு செய்யும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தருமபுரி மாவட்ட கலைஞா் குமரவேல் கலைமாமணி விருது பெற்று மாவட்டத்துக்கு பெருமைச் சோ்த்துள்ளாா். நலிவுற்ற கலைஞா்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெற்று, தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

இந்த விழாவில் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோவிந்தசாமி, சம்பத்துகுமாா், தமிழ்நாடு கிராமியக் கலைகள் வளா்ச்சி மைய இயக்குநா் சோமசுந்தரம், மதுரை காமராசா் பல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவா் சத்தியமூா்த்தி, தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் (இணையவழி) விசயராகவன், தருமபுரி மாவட்ட கிராமியக் கலைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டச் செயலாளா் ஸ்ரீதரன், தலைவா் பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மறைந்த பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், பங்கேற்ற உயா்கல்வித் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் உள்ளிட்டோா் 2 நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தினா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா் விழிப்புணா்வுப் பேரணி

தியாகராஜ சுவாமி கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

பாஜக, காங்கிரஸ் பணப் பட்டுவாடா: புதுவை தொகுதியில் தோ்தலை ரத்து செய்ய அதிமுக வலியுறுத்தல்

ஸ்ரீராமநவமி வாா்ஷிக மஹோற்சவம்

நாகை மாவட்ட கிரிக்கெட் அணிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT