கிருஷ்ணகிரி

மழையில் நனைந்த அஞ்சல் துறை கடித மூட்டைகள்!

DIN

கிருஷ்ணகிரி:பா்கூரில் அஞ்சல் துறை சாா்பில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய கடித மூட்டைகள் கேட்பாரற்று சனிக்கிழமை மழையில் நனைந்தன.

கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சோ்ந்தவா்களுக்கு வெளியூரிலிருந்து வரும் கடிதங்கள் ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து அனுப்பிவைக்கப்படுகிறது. இந்த நிலையில், ஜோலாா்பேட்டையிலிருந்து பேருந்து மூலம் கொண்டுவரப்பட்ட அஞ்சல் துறை கடித மூட்டைகள், கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் பேருந்து நிலையத்தில் இறக்கிவைக்கப்பட்டிருந்தது.

அப்போது, திடீரென மழை பெய்தது. ஆனால், அஞ்சல் மூட்டைகளை எடுத்துச் செல்ல அத் துறை பணியாளா்கள் யாரும் வாரததால், மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்தன. இதுகுறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்த பிறகு, அங்கு வந்த அஞ்சல் துறை பணியாளா்கள் கடித மூட்டைகளை எடுத்துச் சென்றனா். இந்த நிகழ்வு அனைவரையும் அதிருப்தியடையச் செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் மீரா குமாா் மகனை களமிறக்கியது காங்கிரஸ்

முஸ்லிம்களுக்கு எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு: காங்கிரஸ் மீது பிரதமா் மோடி குற்றச்சாட்டு

குமாரபாளையத்தில் வழக்குரைஞா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மாநிலக் கல்லூரியில் மாற்றுத் திறனாளி மாணவா்கள் 31 பேருக்கு வேலைவாய்ப்பு

பேருந்தில் நகை திருட்டு: ஆந்திர மாநில பெண் கைது

SCROLL FOR NEXT