கிருஷ்ணகிரி

அரூரில் மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம்

DIN

அரூா்:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரூரில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அரூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் தமிழ்ச்செல்வி தலைமை வகித்தாா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் உரிய முறையில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைகளை வழங்க வேண்டும். மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெற வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

தேசிய மின்சார திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். உணவுப் பாதுகாப்பு சட்டத்தில், நீதிமன்ற அறிவுரையின்படி, மாற்றுத் திறனாளிகளை இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT