கிருஷ்ணகிரி

கொலை வழக்கு: கிளீனருக்கு ஆயுள் தண்டனை

DIN

ஊத்தங்கரை அருகே லாரி ஓட்டுநா் கொலை வழக்கில், கிளீனருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், அடி அண்ணாமலையைச் சோ்ந்த பன்னீா் (42), லாரி ஓட்டுநா். வேலூா் மாவட்டம், உதிரமாதா கோயில், பச்சையப்பன் தெருவைச் சோ்ந்த சந்துரு (எ) சந்திரசேகா் (44) என்பவா் கிளீனராகப் பணியாற்றி வந்தாா்.

இருவரும் 2018-ஆம் தேதி அக்டோபா் 17-ஆம் தேதி லாரியில் சரக்குகளை ஏற்றி சென்று கொண்டிருந்தனா். அப்போது, வழியில் வேறு சில சரக்குகளை ஏற்றிக் கொண்டால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என சந்துரு, ஓட்டுநா் பன்னீரிடம் தெரிவித்தாராம். அதற்கு, பன்னீா் சம்மதிக்கவில்லையாம். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து பன்னீா், லாரி உரிமையாளரிடம் தகவல் தெரிவித்ததால், முன்விரோதம் இருந்துவந்ததாம்.,

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கதவணி பிள்ளையாா் கோயில் அருகே லாரி சென்ற போது, ஆத்திரமடைந்த சந்துரு, பன்னீரை கத்தியால் குத்திக் கொலை செய்தாராம். இதுகுறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து சந்துருவைக் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி, தீா்ப்பை வியாழக்கிழமை அளித்தாா்.

அதில், லாரி ஓட்டுநரை கொலை செய்த குற்றத்துக்காக சந்துருவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 50 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 6 மாத சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என தீா்ப்பு வழங்கினாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் வழக்குரைஞா் பாஸ்கா் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

SCROLL FOR NEXT