கிருஷ்ணகிரி

பர்கூர் எம்எல்ஏ சி.வி. ராஜேந்திரனுக்கு கரோனா

25th Sep 2020 07:15 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் சிவி ராஜேந்திரனுக்கு (அதிமுக) கரோனோ நோய் தோற்று உறுதியான நிலையில், அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது சொந்த ஊர் பர்கூர் அருகே உள்ள சிந்தகம்பள்ளி ஆகும். கடந்த சில நாட்களாகவே அதிமுகவின் கட்சி கூட்டங்களிலும் தனது தொகுதியில் வளர்ச்சிப் பணிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த சில நாட்களாக இருமல் காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தார். அண்மையில் அவருக்கு மேற்கண்ட பரிசோதனையில் கருணா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த சில நாட்களாக அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி சட்டப்பேரவை உறுப்பினர் டி. செங்குட்டுவன், கரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தார். கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் செல்லக்குமார், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கரோனா நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார். தற்போது, சி.வி. ராஜேந்திரன் எம்எல்ஏ, கரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
 

Tags : coronavirus
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT