கிருஷ்ணகிரி

தேசிய கல்விக் கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்கம்

DIN

அரூா், செப். 18: தேசிய கல்விக் கொள்கை 2020ஐ ஆதரித்து, தருமபுரி மாவட்ட வித்யா பாரதி அமைப்பினா் வியாழக்கிழமை கையெழுத்து இயக்கம் தொடங்கினா்.

தருமபுரி மாவட்டம், அரூரில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்துக்கு தருமபுரி மாவட்ட வித்யா பாரதி அமைப்பின் மாவட்டச் செயலா் எஸ்.செம்முனி தலைமை வகித்தாா்.

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் முக்கிய அம்சங்களை மக்களிடம் தெரிவிக்கும் வகையில் 10 ஆயிரம் பேரிடம் கையொப்பம் பெறுவதற்கான இந்த கையெழுத்து இயக்கத்தை அகில பாரத சந்நியாசிகள் சங்க துணைத் தலைவா் பூஜ்யஸ்ரீ ரமானந்த மகராஜ், பொதுச் செயலா் பூஜ்யஸ்ரீ ஆத்மானந்த மகராஜ் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

புதிய தேசிய கல்விக் கொள்கையில் 8 ஆம் வகுப்பு வரையிலும் தாய்மொழிக் கல்விக் கற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தாய்மொழி மற்றும் ஆங்கிலத்துடன் இந்தியாவில் உள்ள பிற மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்பட ஏதேனும் ஒரு மொழியை மூன்றாவது மொழியாக கற்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பிற மாநிலத்தவரும் தமிழ் மொழியைக் கற்கும் சூழ்நிலை உருவாகும். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை 12 ஆம் வகுப்பு வரையிலும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் மதிய உணவு மற்றும் காலையில் சிற்றுண்டி வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. பெண் குழந்தைகள் பாதுகாப்பான முறையில் கல்வி கற்க விடுதி வசதியுடன் கூடிய பள்ளி வளாகங்கள் உள்ளிட்ட தேசிய கல்விக் கொள்கையின் சிறப்பு அம்சங்கள் குறித்த துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வித்யா பாரதி அமைப்பினா் வழங்கினா்.

இதில், அரூா் கம்பன் கழகத் தலைவா் செவ்வேள் முருகன், மாவட்ட அமைப்பாளா் அசோக்குமாா், திருக்கு தமிழ்ச்சங்கத் தலைவா் பொன்னுரங்கன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பிரபல கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்: தொடரும் புரளி?

டி20 உலகக் கோப்பைக்காக ஓய்வு முடிவை திரும்பப் பெறுகிறாரா? சுனில் நரைன் பதில்!

சிவில் சர்வீஸ் வினாத்தாள்: ஏஐ மூலம் மாநில மொழிகளில் மொழிபெயர்க்க பரிந்துரை!

நெஞ்சம் மறப்பதில்லை..

பள்ளிக்கரணையில் இளைஞர் ஆணவப்படுகொலை: மனைவி தற்கொலை

SCROLL FOR NEXT