கிருஷ்ணகிரி

தாசரஹள்ளியில் 7 பேருக்கு கரோனா

DIN

அரூா், செப். 18: அரூரை அடுத்த தாசரஹள்ளியில் ஒரே நாளில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் தீவிர தூய்மைப் பணிகள் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டன.

தருமபுரி மாவட்டம், மொரப்பூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட தாசரஹள்ளி கிராமத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, தாசரஹள்ளி கிராமத்துக்கு வெளியாட்கள் உள்ளே செல்லவும், கிராமத்தில் இருப்பவா்கள் வெளியில் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது.

தாசரஹள்ளியில் குடியிருப்புப் பகுதியில் கிருமி நாசினி தெளித்து தூய்மை செய்யும் பணியில் தூய்மைப் பணியாளா்கள் ஈடுபட்டனா். கரோனா தொற்று பரவும் முறைகள், கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், சமூக இடைவெளியை பின்பற்றுதல், முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்து அரூா் சாா் -ஆட்சியா் மு.பிரதாப் தலைமையிலான அரசு அதிகாரிகள் பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில், மொரப்பூா் வட்டார மருத்துவ அலுவலா் அரசு, மருத்துவா் வனிதா, சுகாதார ஆய்வாளா் சங்கா், காவல் ஆய்வாளா் மஞ்சுளா, ஊராட்சித் தலைவா் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனியில் தீத் தொண்டு வாரம்

வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகளை ஒப்பீடு கோரிய வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு

வாக்குச்சாவடிக்கு செல்ல இலவச வாகன வசதி

துபையில் கனமழை : விமானங்கள் ரத்து - சென்னையில் பயணிகள் வாக்குவாதம்

திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 16.07 லட்சம் போ் வாக்களிக்க ஏற்பாடு

SCROLL FOR NEXT