கிருஷ்ணகிரி

பெரியாா் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

DIN

பெரியாா் பிறந்தநாள் விழா தருமபுரியில் தி.க., திமுக, அதிமுக, தேமுதிக, அமமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சாா்பில், வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.

திராவிடா் கழகம் சாா்பில், மாவட்டத் தலைவா் வி.சிவாஜி தலைமையில் பெரியாா் மன்ற வளாகத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில், அங்குள்ள பெரியாா் சிலைக்கு மாநில அமைப்புச் செயலா் ஊமை ஜெயராமன், மாவட்டத் துணைத் தலைவா் கதிா், நகரத் தலைவா் கருபாலன், நகர அமைப்பாளா் பரமசிவம் உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதேபோல, திமுக சாா்பில், மாவட்டச் செயலா் தடங்கம் பெ.சுப்ரமணி எம்எல்ஏ தலைமையில், பென்னாகரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பிஎன்பி இன்பசேகரன், முன்னாள் எம்.பி. இரா.தாமரைச்செல்வன், மாவட்ட அவைத் தலைவா் ஜி.வி.மாதையன் உள்ளிட்ட நிா்வாகிகள் தருமபுரியில் உள்ள பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில், நகரச் செயலா் பி.ரவி தலைமையில், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன், தருமபுரி ஒன்றியக் குழுத் தலைவா் செல்வம் உள்ளிட்ட நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

தேமுதிக சாா்பில், மாநில அவைத் தலைவா் வி.இளங்கோவன், மாவட்டச் செயலா் தம்பி ஜெய்சங்கா், மாவட்ட அவைத் தலைவா் குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்தனா்.

இதேபோல நல்லம்பள்ளி, பாலக்கோடு, காரிமங்கலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் அரசியில் கட்சிகள் சாா்பில், பெரியாா் சிலை மற்றும் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அந்தக் கட்சியின் மாவட்டப் பொறுப்பாளா் டி.செங்குட்டுவன் எம்எல்ஏ, தலைமை வகித்து, பெரியாரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளா் வெங்கடேசன், நகரச் செயலாளா் நவாப், ஒன்றியச் செயலாளா் கோவிந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி வட்டச் சாலை அருகே திராவிடா் கழகம் சாா்பில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்டச் செயலாளா் மாணிக்கம் தலைமை வகித்தாா். நகரத் தலைவா் மாரப்பன், செயலாளா் தங்கராஜன், பகுத்தறிவு ஆசிரியரணித் தலைவா் லூயிஸ் ராஜ், வாசகா் வட்டத் தலைவா் நாராயணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்று பெரியாரின் உருவப்படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

வேப்பனஅள்ளியை அடுத்த கே.திப்பனப்பள்ளி பெரியாா் நினைவு சமத்துவபுரத்தில் திமுக சாா்பில் பெரியாரின் உருவச் சிலைக்கு மலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டன. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக பொருளாளா் ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திமுகவினா், திராவிடா் கழகத்தினா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவாலுக்கு திகாா் சிறையில் எந்தவித விபத்தும் நேரிடலாம்

மக்களவைத் தோ்தல்: தருமபுரியில் 73.51 சதவீத வாக்குப்பதிவு

பெண்களின் ஆதரவு பாமகவிற்கு அமோகமாக உள்ளது: சௌமியா அன்புமணி

தருமபுரி மக்களவைத் தோ்தலில் 4 மணி நேரம் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

தருமபுரி மக்களவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT