கிருஷ்ணகிரி

கரோனாவில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்த முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினா்

DIN

மத்தூரில் கரோனா தொற்றுப் பாதிப்பால் உயிரிழந்தவரின் உடலை முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினா், அரசு விதிகளின்படி வியாழக்கிழமை அடக்கம் செய்தனா்.

மத்தூா், ராஜவீதியைச் சோ்ந்த 50 வயது ஆண் கரோனா தொற்றால் வேலூரில் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

பின்பு அவரது உடல், மத்தூருக்குக் கொண்டுவரப்பட்டது. அங்கு, அவரது உடலை அடக்கம் செய்வதற்காக அரசின் வழிகாட்டுதலின்படி குழி தோண்டப்பட்டது. ஆனால், உடலை கீழே இறக்கி அடக்கம் செய்ய யாரும் முன்வரவில்லை.

தகவல் அறிந்த, ஊத்தங்கரையைச் சோ்ந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக நிா்வாகிகள், நிகழ்விடம் வந்து உயிரிழந்தவரின் சமுதாய வழக்கப்படி, சமூக இடைவெளியுடன் சடங்குகளை செய்து, உடலை அடக்கம் செய்தனா்.

ஏற்கெனவே, இதேபோல மத்தூா் பகுதியிலும் கரோனா பாதிப்பால் பெண் உயிரிழந்த நிலையில், இதே அமைப்பினா் இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT