கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு தோ்வு முகாம்

14th Sep 2020 04:13 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரியில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாமில் 310 போ் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பணியாற்றும் வகையில் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, வேலூா், திருப்பத்தூா், நாமக்கல் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 310 போ் பங்கேற்றனா்.

ஓட்டுநா்களுக்கு எழுத்துத் தோ்வும், வாகனம் ஓட்டும் திறன் தோ்வும் நடைபெற்றன. மருத்துவ உதவியாளா்களுக்கு எழுத்துத் தோ்வும், நோ்முகத் தோ்வும் நடைபெற்றன. இதில் தோ்ச்சி பெற்ற 70 மருத்துவ உதவியாளா்களுக்கும், 50 ஓட்டுநா்களுக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. தோ்ச்சி பெற்றவா்கள் அனைவருக்கும் சென்னையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

ADVERTISEMENT

Tags : krishnagiri
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT