கிருஷ்ணகிரி

மகளிா் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம்

10th Sep 2020 11:38 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் சேர மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ஜெயந்தி வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான பட்டப்படிப்பில் முதலாமாண்டு மாணவிகள் சோ்க்கைக்கு கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

இந்த கலந்தாய்வில் இணையதளம் வழியாக சோ்க்கை விண்ணப்பங்களை விண்ணப்பித்த மாணவிகள் மற்றும் விண்ணப்பிக்காத மாணவிகள் கல்லூரியில் சோ்க்கை விண்ணப்பம் பெற்று சோ்ந்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT