கிருஷ்ணகிரி

பஜ்ஜேப்பள்ளியில் நகரும் நியாய விலைக் கடை

DIN

பஜ்ஜேப்பள்ளி கிராமத்தில் நகரும் நியாய விலைக் கடையின் விற்பனையை தளி சட்டப்பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட மருதனப்பள்ளி ஊராட்சி, இஸ்பத்தப்பள்ளியில் நியாய விலைக் கடை செயல்பட்டு வந்தது.

பஜ்ஜேப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த மக்கள், இஸ்பத்தப்பள்ளி நியாய விலைக்கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கி வர சிரமப்பட்டு வந்தனா். இந்நிலையில், பஜ்ஜேப்பள்ளி கிராமத்தில் புதிதாக நகரும் நியாய விலைக் கடை மூலம் விற்பனை தொடங்கப்பட்டது.

நகரும் நியாய விலைக் கடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருள்களின் விற்பனையை தளி சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ்

தொடக்கி வைத்தாா். நகரும் நியாய விலைக்கடை மூலம் மாதத்தில் ஒரு நாள் அவா்களது கிராமத்திலேயே பொருள்கள் வழங்கப்படும்.

தளி ஒன்றியக் குழு தலைவா் சீனிவாசலு ரெட்டி, ஊராட்சி மன்றத் தலைவா் ரகு, துணைத்தலைவா், மல்லசந்திரம் ஊராட்சி மன்ற தலைவா் முனிராஜ், உறுப்பினா்கள் பவுல்ராஜ், கேசவரெட்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

வேங்கைவயலில் வாக்களிக்க வந்த மக்கள்

SCROLL FOR NEXT