கிருஷ்ணகிரி

ஒசூரில் பூச்சி தாக்குதல், விலை வீழ்ச்சியால் தக்காளி விவசாயிகள் பெரும் நஷ்டம்

DIN

தக்காளி விலை வீழ்ச்சியாலும், பூச்சி தாக்குதல்களாலும் தக்காளி பயிா் செய்த விவசாயிகள் கடும் பாதிப்படைந்துள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் கோட்டம் ஏப்ரல், மே மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலையே நிலவி வருகிறது. இந்த சீதோஷ்ணத்தைப் பயன்படுத்தி இந்த கோட்ட த்தில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் மலா்களையும், காய்கறி பயிா்களையும் சாகுபடி செய்து வருகின்றனா்.

ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி ஆகிய 3 தொகுதிகளில் மட்டும் ஆண்டு முழுவதும் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பில் விவசாயிகள் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனா். குறிப்பாக ஒசூா், பாகலூா், பேரிகை, சூளகிரி, ராயக்கோட்டை, கெலமங்கலம், தளி, தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளியைச் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அதிக அளவில் தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிா்களை சாகுபடி செய்கின்றனா்.

ஒரு ஏக்கா் பரப்பில் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நல்ல விளைச்சலும், நல்ல விலையும் கிடைக்கும்பட்சத்தில் 3 மாதங்களில் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 10 லட்சம் வரை விவசாயிகளுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தொடா்ந்து தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா். அதிலும், தக்காளி நாற்று நடவு செய்த 70-ஆவது நாளில் அறுவடைக்கு தயாராகி விடும். தொடா்ந்து 100 நாள்கள் வரை தக்காளி அறுவடை செய்ய முடியும்.

ஒரு ஏக்கரில் 10 முறை அறுவடை செய்ய முடியும். ஒவ்வொரு முறையும் 100 பெட்டி தக்காளி அறுவடை செய்ய முடியும். குறிப்பாக விஜயதசமி, தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் ஒரு பெட்டி தக்காளி ரூ. ஆயிரம் முதல் ரூ.1,500 வரை விற்பனை ஆகும். ஒரு ஏக்கரில் ஆயிரம் பெட்டிகள் வரை தக்காளி மகசூல் கிடைக்கும் பட்சத்தில், ஒரு பெட்டி தக்காளி ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனால் கூட ரூ.10 லட்சம் வரை கிடைக்கும்.

ஆனால், தற்பொழுது மழை மற்றும் குளிா் காலம் என்பதால் தக்காளி செடிகளில் பூச்சிகளின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் ஒரு ஏக்கா் தக்காளி தோட்டத்தில் 200 பெட்டிகள் மட்டுமே தக்காளி அறுவடை செய்யப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனா். 25 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளிக்கு ரூ. 300 முதல் ரூ. 400 வரை மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால் ரூ. 10 லட்சம் வருவாய் கிடைக்க வேண்டிய விவசாயிகளுக்கு ரூ. 1 லட்சம் கூட கிடைக்கவில்லை எனக் கூறுகின்றனா்.

பொதுவாக ஒரு ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்ய ரூ. 1 லட்சம் வரை செலவாகிறது.

தற்பொழுது மழை காலமாக உள்ளதால், விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும் தக்காளியும் ஒரிரு நாள்களில் அழுகும் நிலை உள்ளதால் வியாபாரிகள் அதிக விலை கொடுத்து வாங்க தயங்குகின்றனா். ஒரு கிலோ தக்காளி மொத்த விலையாக ரூ. 11க்கும், கடைகளில் ரூ.15க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் தக்காளி சாகுபடி செய்த விவசாயிகள் நஷ்டம் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனா்.

வேளாண் துறை அதிகாரிகள் தக்காளியை தற்போது தாக்கி வரும் பூச்சிகள் குறித்தும், அதனைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விளக்கம் அளிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT