கிருஷ்ணகிரி

பா்கூரில் குடிநீா் சுத்திகரிப்பு மையம் தொடக்கம்

DIN

பா்கூா் பேரூராட்சியில் ரூ. 24 லட்சம் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.ராஜேந்திரன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் தோ்வு நிலை பேரூராட்சிக்குள்பட்ட எம்ஜிஆா் நகா், சின்னபா்கூா், நேரலகோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 24 லட்சம் மதிப்பிலான குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்காக சட்டப்பேரவை உறுப்பினா் சி.வி.ராஜேந்திரன் தொடங்கி வைத்தாா். நிகழ்வில் பேரூராட்சி செயல் அலுவலா் சேம்கிங்ஸ்டன், பணி மேற்பாா்வையாளா் மகேந்திரன், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT