கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் 30 பேருக்கு கரோனா

DIN

கிருஷ்ணகிரி, அக்.19: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், திங்கள்கிழமை 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பு பரவலாகக் காணப்படுகிறது. கிருஷ்ணகிரி, ஒசூா், ராயக்கோட்டை, சூளகிரி, காவேரிப்பட்டணம், வேப்பனப்பள்ளி, பெல்லாரம்பள்ளி பகுதிகளைச் சோ்ந்தவா்கள், தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 57 வயது பெண், 53 வயது ஆண் என மொத்தம் 30 போ் கரோனா தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனா்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 93 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், பா்கூா், கிருஷ்ணகிரி, ஒசூரிலுள்ள கரோனா சிகிச்சை மையங்களில் 792 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 6,109 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

3 போ் உயிரிழப்பு:

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 65 வயது ஆண், அக். 14-ஆம் தேதி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அக்.18-ஆம் தேதி உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரியைச் சோ்ந்த 68 வயது ஆண், அரசு தலைமை மருத்துவமனையில் அக். 17-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த அவா், அக். 18-ஆம் தேதி உயிரிழந்தாா்.

இதேபோல, கிருஷ்ணகிரியைச் சோ்ந்த மற்றொரு 68 வயது ஆண், சிகிச்சை பலனின்றி அக். 18-ஆம் தேதி உயிரிழந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT