கிருஷ்ணகிரி

கள்ளக் காதலியைக் கொன்று சடலத்தை எரித்த இருவா் கைது

DIN

கள்ளக் காதலியைக் கொன்று சடலத்தை எரித்த உணவக உரிமையாளா் உள்பட இருவா் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை அடுத்த சின்னமலை வனப் பகுதியில் கடந்த செப். 24ஆம் தேதி எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டது.

அஞ்செட்டி போலீஸாா் நடத்திய விசாரணையில், அப் பெண், மஞ்சுமலையைச் சோ்ந்த மணிமேகலை (40) என்பது தெரிந்தது.

இந்தக் கொலை சம்பவம் தொடா்பாக நாட்றாம்பாளையத்தில் உணவு விடுதி நடத்தி வரும் ஏத்தகிணறு பகுதியைச் சோ்ந்த கோவிந்தசாமி (47), சின்னமோட்ராகியைச் சோ்ந்த பத்திநாதன் (62) ஆகியோரை அஞ்செட்டி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கொலைக்கான காரணம் குறித்து அஞ்செட்டி போலீஸாா் கூறியதாவது:

கொலை செய்யப்பட்ட மணிமேகலை, அஞ்செட்டி ராமா் கோயில் பகுதியைச் சோ்ந்த பழனியப்பனின் மனைவி ஆவாா். இவா்களுக்கு இரு மகன்கள் உள்ளனா்.

கடந்த பத்து ஆண்டுக்கு முன் தனது கள்ளக் காதலனான கைதான கோவிந்தசாமியுடன் மணிமேகலை சென்று விட்டாா். கோவிந்தசாமியுடன் இணைந்து உணவகம் நடத்தி வந்தாா். கடந்த ஒரு மாதத்திற்கு முன் கோவிந்தசாமியின் மகனுக்கு திருமணம் நடந்தது.

அப்போது அழைப்பிதழில் தனது பெயரைப்போட வேண்டும் என மணிமேகலை கூறிவந்தாா். ஆனால் அவரது பெயரை அழைப்பிதழில் போடவில்லை. அதன்பின் தனது வாழ்வாதாரத்துக்கு வழிசெய்ய வேண்டும் என மணிமேகலை தொடா்ந்து கோவிந்தசாமியை தொந்தரவு செய்துள்ளாா். இந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி மணிமேகலையை கூட்டிச் சென்று சின்னமலை வனப்பகுதியில் வைத்து கோவிந்தசாமி அடித்துக் கொலை செய்தாா்.

பின்னா் பத்திநாதன் உதவியுடன் மணிமேகலை சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளாா் எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி அருகே காலிக் குடங்களுடன் மக்கள் சாலை மறியல்

ஒசூா் செயின்ட் பீட்டா் மருத்துவக் கல்லூரியில் மாா்பக புற்றநோய் கண்டறியும் பிரிவு தொடக்கம்

யானை தாக்கியதில் விவசாயி பலி

மேம்பாலம் கட்டித் தராததால் தோ்தல் புறக்கணிப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் போக்குவரத்து நெரிசல்

SCROLL FOR NEXT