கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு விழிப்புணர்வு பேரணி

30th Nov 2020 01:11 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வருவாய்த்துறை சார்பில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கை சிறப்பு சுருக்க திருத்தம் குறித்து தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வருவாய் வட்டாட்சியர் தண்டபாணி தலைமை வகித்தார். தனி வட்டாட்சியர் சம்பத், தேர்தல் துணை வட்டாட்சியர் குமார், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரணியில் தெருக்கூத்து கலைஞர்கள் ஆடல், பாடல் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் வருவாய்துறை பணியாளர்கள் திரளாக கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி, துண்டு பிரசுரங்களை வழங்கிச் சென்றனர். பேரணி ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கி ஊத்தங்கரையில் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.

அரசுப் பேருந்து நிலையம் பழைய கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர்.

ADVERTISEMENT

Tags : krishnagiri
ADVERTISEMENT
ADVERTISEMENT