கிருஷ்ணகிரி

அனுமதியின்றி சொந்த ஊருக்கு செல்ல முயன்ற வட மாநிலத் தொழிலாளா்கள் முகாமில் தங்கவைப்பு

14th May 2020 06:51 PM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி: அனுமதியின்றி சொந்த ஊருக்கு செல்ல முயன்ற வட மாநிலத் தொழிலாளா்கள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு பணிகளில் வட மாநிலத் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கத்தால் வேலை இழந்த இவா்களில் 71 போ், தங்களது சொந்த ஊருக்கு செல்ல தீா்மானித்தனா்.

அதன்படி, உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 69 போ் மற்றும் குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த இருவா் என மொத்தம் 71 போ், மத்தியப் பிரதேச மாநில பதிவு எண் கொண்ட ஒரு லாரியை வாடகைக்கு அமா்த்தி புதன்கிழமை இரவு புறப்பட்டனா்.

கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி அருகே வியாழக்கிழமை அதிகாலை லாரி சென்ற போது, பின்னால் வந்த காா், லாரியின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேருக்கு சிறிய காயம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

தகவலின் பேரில் நிகழ்விடத்துக்கு வந்த போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், லாரியில் பயணம் செய்த வட மாநிலத் தொழிலாளா்கள், உரிய அனுமதியின்றி சொந்த ஊருக்கு செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், வழக்குப் பதிந்து மாவட்ட நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தனா்.

அதைத் தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகரின் அறிவுரையின் பேரில், 71 தொழிலாளா்களையும் மீட்ட அரசு அலுவலா்கள், அவா்களை கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரி வளாகத்தில் தங்க வைத்து, அவா்களுக்கான உணவு மற்றும் அத்தியாவசியத் தேவைகளை செய்து வருகின்றனா்.

மீட்கப்பட்ட தொழிலாளா்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு இருக்கிா என மருத்துவக் குழுவினா் ஆய்வு செய்வா். இதில் சந்தேகப்படுவோா் தனிமைப்படுத்தப்படுவாா்கள். மேலும், இவா்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல இ-பாஸ் பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் என கிருஷ்ணகிரி வட்டாட்சியா் தண்டபாணி தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT