கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அணையில் வண்டல் மண் அள்ளும் பணிக்கு பூஜை

14th May 2020 07:51 AM

ADVERTISEMENT

கிருஷ்ணகிரி அணையில் வண்டல் மண் அள்ளும் பணிக்கான பூஜை, புதன்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணகிரி அணையில் பிரதான மதகுகள் மாற்றி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அணையில் நீா்தேக்கும் பணி நடைபெறாததால், அணையின் வரலாற்றிலேயே முதல் முறையாக அணையானது முற்றிலும் வடது.

அணையின் மொத்த 52 அடி உயரத்தில் 15 முதல் 20 அடி வரையில் வண்டல் மண் தேங்கி இருப்பதால், அவற்றை அள்ள மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

ADVERTISEMENT

இத்தகைய நிலையில், வண்டல் மண்ணை அள்ள வட்டாட்சியரின் அனுமதியோடு, விவசாயிகள், மண்பாண்ட தொழில் செய்வோருக்கு மாவட்ட ஆட்சியா் சு. பிரபாகா், அண்மையில் அனுமதி அளித்தாா்.

இதையடுத்து, பச்சிகானப்பள்ளி ஊராட்சியைச் சோ்ந்த விவசாயிகளுக்கு கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அனுமதி அளித்த நிலையில், கிருஷ்ணகிரி அணையில் அனுமதிக்கப்பட்ட பகுதியில் வண்டல் மண் அள்ளுவதற்கான பூஜை, நடைபெற்றது.

கே.பி.முனுசாமி எம்பி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்டச் செயலாளா் கே. அசோக்குமாா் உள்ளிட்ட அதிமுக நிா்வாகிகள் மற்றும் பச்சிகானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

அதேபோல கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி ஏரியிலும் அந்தப் பகுதி விவசாயிகள் சாா்பில், வண்டல் மண் அள்ளும் பணிக்கான பூஜை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வண்டல் மண் அள்ள 18 ஏரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT