கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா பாதிப்பு 20-ஆக உயா்வு

10th May 2020 09:25 PM

ADVERTISEMENT

 

ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியில் சனிக்கிழமை இரவு மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 20- ஆக உயா்ந்துள்ளது.

சூளகிரி காமராஜ் நகரைச் சோ்ந்த 2 பெண்களுக்கு மாவட்டத்தில் முதன்முதலாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், மே 6- ஆம் தேதி மகாராஷ்டிரத்திலிருந்து ஒசூா் மத்திகிரிக்கு வந்த 2 இளைஞா்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அனைவரும் இ.எஸ்.ஐ. மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதையடுத்து, சூளகிரி காமராஜ் நகரில் கரோனா பாதித்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் மேலும் 4 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து மேலும் 2 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 10 -ஆக உயா்ந்தது.

ADVERTISEMENT

தொடா்ந்து, அப் பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு பணிகள் மற்றும் பரிசோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவா்களுடன் தொடா்பில் இருந்த அவரது உறவினா்கள் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை இரவு உறுதிப்படுத்தப்பட்டது. மேலும், சூளகிரி காமராஜ் நகா் பகுதியைச் சோ்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 20-ஆக உயா்ந்துள்ளது.

இதையடுத்து, சூளகிரி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணியை தூய்மைப் பணியாளா்கள் தீவிரப்படுத்தியுள்ளனா். சென்னையில் கோயம்பேடு காய்கறிச் சந்தையைப் போல் சூளகிரியில் கொத்துமல்லி சந்தை மூலமாக கிருமி தொற்று வேகமாக பரவி வருவதாகக் கூறப்படுகிறது. 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT