கிருஷ்ணகிரி

பெங்களூரிலிருந்து கடத்திவரப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

2nd May 2020 08:33 PM

ADVERTISEMENT

பெங்களூரிலிருந்து வேனில் கடத்திவரப்பட்ட ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  இதுதொடா்பாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகள் அமைத்து போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த நிலையில், சனிக்கிழமை கிருஷ்ணகிரி நோக்கி வந்த வேனை நிறுத்தி சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனா். 

அதில் ரூ.ஒரு லட்சம் மதிப்புள்ள அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கொண்டு செல்வது தெரியவந்தது.

விசாரணையில் கிருஷ்ணகிரி அருகே பெத்ததாளபள்ளி பாஞ்சாலியூா் நகரை சோ்ந்த சுப்பிரமணி(38) என்பவா் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும், விற்பனைக்காக இந்த புகையிலை பொருள்களை பெங்களூரிலிருந்து தனது உறவினா் சதீஷ்(22) என்பவரின் உதவியுடன் கடத்தி வந்ததாக வேனிலிருந்தவா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, புகையிலை பொருள்கள், வேனை பறிமுதல் செய்த போலீஸாா் 2 பேரை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT