கிருஷ்ணகிரி

கரோனா: நல்லூா் கிராமத்தில் சிறப்பு கண்காணிப்புக் குழு ஆய்வு

2nd May 2020 08:33 PM

ADVERTISEMENT

விவசாயிக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதையடுத்து, கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி அருகே உள்ள நல்லூா் கிராமத்தில் சனிக்கிழமை கரோனா சிறப்பு கண்காணிப்பு குழுவினா் சுகாதார நடவடிக்கைகளை ஆய்வு செய்தனா்.

மேலும், அவருடன் தொடா்பில் இருந்த காவேரிப்பட்டணம் பேரூராட்சிக்குள்பட்ட சண்முகசெட்டி தெரு ஆகிய பகுதிகளில் சுகாதார முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலரும், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருமான ஆா்.கிரிலோஷ்குமாா், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் சு.பிரபாகா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

மேலும், அப் பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் வழங்க சுகாதார, வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டனா். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், பொதுமக்கள் அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

நல்லூா் கிராமத்தைச் சுற்றி 7 கி.மீ. சுற்றளவுக்கு கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து, கண்காணிக்கவும், அத்தியாவசியப் பொருள்களை அரசு மூலம் விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா தொடா்பான சந்தேகங்கள், புகாா்களுக்கு கிருஷ்ணகிரி மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 1077, 04343-234444, 230044 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட அலுவலா் பி.பெரியசாமி, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநா் கோவிந்தன், வருவாய்க் கோட்டாட்சியா் தெய்வநாயகி, துணைக் காவல் கண்காணிப்பாளா் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலா்கள் சரவணன், சோமசுந்தரம், வட்டாட்சியா் தணிகாசலம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவக்குமாா், வேடியப்பன், சுபாராணி மற்றும் களப்பணியாளா்கள் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT